ராவணன் மருத்துவம்[A medicinal Treasure]
புனித இராவணன் உலக மக்களின் நல்வாழ்வுக்காக தாய் தனித் தமிழில் இயற்றிய ஆதித் தமிழர்களின் அரிய மருத்துவக் கலை, தமிழ் மக்களின் அறி வுக்கு எட்டாதவாறு அபகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டும், அடுத்தவர் மொழிக்கு மாற்றப்பட்டும் விட்ட சூழ்நிலையில் இவ்வையகத்து மக்களின் மெய் நலனுக்காக தமிழ் மருத்துவம் தந்த அந்த ஒப்பற்ற தமிழ்த் தலைவரை இழிவுபடுத்தித் திட்டமிட்டு எழுதி வைத்த கட்டுக் கதைகளை நம்பி வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் மத்தியில் அவர் இயற்றிய தமிழ் மருத்துவம் பிற மொழி மருத்துவர்களால் அபகரித்து எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இராவணனை இழிவுபடுத்தி இட்டுக் கட்டிய பொய்க் கதைகளை எழுதி தமிழர்களிடம் அன்னாரை ஒரு அரக்கனாக, கொடுங் குணங் கொண்டவனாக சித்தரித்து மட்டும் அறிமுகப்படுத்தி விட்டு, அவர் இயற்றிய மருத்துவத்தை அன்னாரை இழிவுபடுத்தியவர்களால் பெருமளவில் கையாளப்பட்டு வரும் நிச நிலையை தமிழ் மருத்துவர்களும், தமிழ் கூறும் மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும். இராவணன் தீ நீர் மருத்துவம்: அர்க்கபிரகாசம் எனும் பெயரில் மலையாள மொழியில் வெளியிடப் பட்டுள்ளது. இந்நூல் மூலிகை மற்றும் கடைச் சரக்குகளை முறைப்படி தீ நீராகச் செய்து அனைத்து வகையான வியாதிகளுக்கும் வழங்கும் அரிய மருத்துவ முறையாகும். இந்நூலை மீண்டும் தமிழாக்கம் செய்து சென்னை பெசன்ட் நகர் முனைவர் இர. வாசுதேவன் Ph.D. அவர்கள் வெளியிட் டுள்ளார்கள். தொடர்புக்கு அலைபேசி - 9444892216. மேலும் இராவணன் இயற்றிய குழந்தை மருத்துவம் குமார தந்திர என்ற பெயரில் ஆந்திராவில் தெலுங்கிலும் வட இந்தியாவில் ஆங்கி லத்திலும் இராவணன் பெயரிலேயே நூலாக உள்ளது என்ற தகவலையும், முனைவர் இர. வாசுதேவன் அவர்கள் எமக்கு அளித்துள்ளார். எனவே குமரி மாவட்டத்தில் புழக்கத்திலுள்ள குழந்தை மருத்துவத்தின் மூல நூல் இராவணன் இயற்றிய மதலைவாகட நூலே என்பது தெளிவாக தெரிகிறது. இந்த தீ நீர் மருத்துவ நூல் தெலுங்கில் அர்க்க பிரகாச என இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இராவணன் இயற்றிய மாதர் மருத்து வத்தில் ஒரு சிறு பகுதி அடங்கிய நூலும் தெலுங்கு மொழியிலுள்ளது.. இராவணன் மருத்துவ நூல் பல, தென் இலங்கையில் சிங்கள மொழியில் இருப்பதாக 2000ஆம் ஆண்டு தமிழ் ஈழத்திலிருந்து மரு. சிவ சண்முக ராசா (சி), (கந்தரோடை, சுன்னாகம்) அவர் களால் வெளியிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டில் ஈழத்து சித்த மருத்துவம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராவணன் தீ நீர் மருத்துவ நூல் 16ஆம் நூற்றாண்டில் உருது மொழியில் மொழி பெயர்த்து பாகித்தானில் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஒரு தகவல் உள்ளது. இராவணன் பிறப்பு, 2. வான் அறிவியல், 3 நட்சததிரங்களின் நகர்வு, 4. மதலை நோய் மருத்துவம் (குழந்தை மருத்துவம்), 5. மக்கள் நோய் மருத்துவம், 6. பற்ப, செந்தூர, தீ நீர் வகைகள், 7. மானுட மருத்துவம் , 8.புவியியல் அறிவு தகவல்கள், 9. இரச மருந்துகளின் வீரி யங்கள், தயாரிப்பு முறைகள், 10. யோகா சன செய்முறைப் பயிற்சி, 11. யோகாசன மருத்துவப் பரிகார முறை (யோகா தெரபி), 12. யோகாசனங்களின் வகைகள், 13. சஞ்சீவி முறைகள், 14. உப்பு முறைகள், 15. இராமன் இராவணனை புகழ்தல், 16. பொது மருத்துவ அறிவியல் முறை கள், 17. சிர நோய் மருத்துவம், 18. கிரகங் களின் இடப்பெயர்ச்சிக்கு தீர்வு இந்நூல் களில் மேலும் பல தகவல்கள் உள்ளன. இது மட்டுமன்றி இராவணன் இயற்றிய நாடி நூலும் வட இந்திய தேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிறீ இராவண நாடி கிறிதா என்ற பெயரில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட சமஸ்கிருத சுலோகங்களுடன் இந்தி மொழி யில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நூலை மீண்டும் தமிழாக்கம் செய்து சென்னை தியாகராச நகர் புதிய புத்தக உலகம் சிறிய இராவண நாடி பரீட்சை என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. பர்மா நாட்டில் இராவண மருத் துவ நூல்கள் மொழி மாற்றம் செய்யப் படாமல் அசல் தமிழ் நூல்களாகவே இருப்பதாக தகவல் உள்ளன. அதை பெறுவதற்கு தமிழக அரசும், தமிழ் மருத்துவ உலகமும் தீவிர முயற்சி மேற் கொள்ள வேண்டும். குமரி மாவட்டத் திலும் கேரள மாநிலத்தில் திருவனந்த புரம் மாவட்டத்திலும் சில குறிப்பிட்ட பாரம்பரியம் மிக்க குடும்பங்களில் கோர்வையாக இராவண மருத்துவ நூல்கள் அசல் தமிழ் நூல்களாகவே இருப்பதாக சில ஆசான்கள் கூறுகின் றனர். இந்நிலையில் தமிழ் மக்களுக்கு இந்த அறிவியல் கிடைத்திட பாடுபடா விட்டால் மிகப் பெரிய தமிழர் அறிவியலை நாம் இழந்து விட நேரிடும் என் பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment